Pages

Pages

welcome to

.

ஒரு அழகிய பூந்தோட்டம்...

Malwatta - Ampara

Tuesday, December 27, 2011

க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் - 2011 - மல்வத்தை

நடந்து முடிந்த 2011 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எமது மல்வத்தை கிராமத்தின் கல்வி நிலையில் பாராட்டத்தக்க  உயர்வை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டிற்கான பெறுபேறுகள் மிகவும் சிறப்பாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது எமக்கும் எமது கிராமத்திற்கும் மிகவும் பெருமையை உண்டுபண்ணியுள்ளது மறுக்கமுடியாத விடயமாகும். அந்த வகையில் இவ்வாண்டு சித்தியடைந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவாகவுள்ள எம்முடைய மாணவர்களுக்கு எமது ஊர்மக்கள் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

சிறப்பான, பாராட்டத்தக்க பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள். 

புஷ்பராசா தனுஜா
Subject
Grade
COMMON GENERAL TEST
038
GENERAL ENGLISH
F
POLITICAL SCIENCE
A
LOGIC&SCIENTIFIC METHOD
B
TAMIL
B
Summary
District Rank
70
Island Rank
2435
Z - Score
1.6192

இராசதுரை சரணியா
Subject
Grade
COMMON GENERAL TEST
052
GENERAL ENGLISH
F
POLITICAL SCIENCE
A
LOGIC&SCIENTIFIC METHOD
A
TAMIL
B
Summary
District Rank
67
Island Rank
2399
Z - Score
1.6226

நடராஜா பிரதீஷ்
Subject
Grade
COMMON GENERAL TEST
030
GENERAL ENGLISH
F
POLITICAL SCIENCE
A
EUROPEAN HISTORY
B
TAMIL
B
Summary
District Rank
101
Island Rank
3451
Z - Score
1.5438

கோணாமலை தர்சினி
Subject
Grade
COMMON GENERAL TEST
037
GENERAL ENGLISH
F
POLITICAL SCIENCE
B
HINDU CIVILIZATION
B
TAMIL
B
Summary
District Rank
159
Island Rank
5268
Z - Score
1.4391

சிவநேசராசா அச்சுதன்
Subject
Grade
COMMON GENERAL TEST
043
GENERAL ENGLISH
F
POLITICAL SCIENCE
A
EUROPEAN HISTORY
B
DRAMA AND THEATRE-TAMIL
B
Summary
District Rank
216
Island Rank
7074
Z - Score
1.3517

சிவநேசராசா ராகினி
Subject
Grade
COMMON GENERAL TEST
033
GENERAL ENGLISH
F
POLITICAL SCIENCE
C
HINDU CIVILIZATION
A
TAMIL
B
Summary
District Rank
176
Island Rank
5882
Z - Score
1.4072

தம்பிமுத்து ஜீவன்
Subject
Grade
COMMON GENERAL TEST
045
GENERAL ENGLISH
F
POLITICAL SCIENCE
B
LOGIC&SCIENTIFIC METHOD
A
TAMIL
B
Summary
District Rank
270
Island Rank
8848
Z - Score
1.2735




Saturday, November 12, 2011

கண்ணீர் அஞ்சலி - தெய்வானை அழகையா



வீரமுனையை பிறப்பிடமாகவும் மல்வத்தை புதுனகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானை அழகையா அவர்கள் 11.11.2011 அன்று காலமார். 

அன்னார் காலஞ்சென்ற அழகையாவின் அன்பு மனைவியும். நடேசபிள்ளை {பிரதேசசபை உத்தியோகஸ்தர்}, வீரசேனன், சந்திரசேனன் {கல்விசாரா ஊழியர்}, சந்திரமதி, காலஞ்சென்ற அலங்கார், அஸ்ஸாணி {அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியஸாலை},  சாந்தினி {ஆசிரியை}, சரோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

மாணிக்கம், பொன்னம்பலம் {நிருவாக உத்தியோகத்தர்}, சரஸ்வதி, காலஞ்சென்ற சாமித்தம்பி, ஆகியோரின் சகோதரியும், 
பொன்னம்பலம், கனகம்மா, அன்னம்மா, யோகராசா, கனகம்மா {கல்முனை}, பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும், 

தங்கவேல், கருணாகரன், சிவகுமார், சாந்தன், சிந்தாத்துரை, சண்முகம், விஜயகுமாரி, தமிழ்செல்வி, பாக்கியலெட்சுமி, கமலநாதன், சுமதி {ஆசிரியை}, வசந்தினி {ஆசிரியை}, DR.துசிதரன், நிசாந்தன், பிரியதர்சன் {கிழக்குப் பல்கலைக்கழகம்}, தேவதர்ஷினி {யாழ் பல்கலைக்கழகம்}, பவித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

நடராஜன் {ஆசிரியர்}, கர்ணன் {தென்கிழக்குப் பல்கலைக்கழகம்}, இராஜேஸ்வரி, சகாதேவன் {ஆசிரியர்}, இராஜலெட்சுமி, தீபாநந்தினி {ஆசிரியை}, பவாநந்தினி, திருச்செல்வி, டிலக்சன், நந்தன் ஆகியோரின் பெரியம்மாவும், 

நிர்மல்ராஜ், விதர்சிகா, யுகாஜினி, அம்ரிதா, லேனுஜா, கோபிநாத், பிறப்பு, முரளி, பிரசன்னா, அரவிந்த், சலுஜா ஆகியோரின் அம்மம்மாவும், 

ஜனதீபன், மைதிலி, சஜிவர்மன், வருன்பிரதீப், கிருஜன், அனுசிகா, நவநீதா, நவநீதன், மேனகா {கிழக்குப் பல்கலைக்கழகம்}, மேருஷன், மிதுசன், அருஷிகன், கிருஷ்டிகா, கஜானன், இந்துஜன், நிவேதா ஆகியோரிரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12.11.2011 சனிக்கிழமை காலை 10.00  மணிக்கு மல்வத்தை புதுநகரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனப் பிரார்த்திக்கிறோம்.

Thursday, October 20, 2011

தொடரும் யானையின் அட்டகாசங்கள்..

இரண்டாவது நாளாகவும், 2011.10.19  புதன்கிழமை  நள்ளிரவு வேளையில்  ஊருக்குள் புகுந்த யானையொன்று பொதுமக்களின் சொத்துக்கள் சிலவற்றைச் சேதப்படுத்தியதோடு, பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி, ஊரில் அமைதியின்மையை உண்டுபண்ணியுள்ளது..  
                                                                  குறித்த  ஒரு வளவினுள் புகுந்த அந்த யானை வீட்டினுள்ளிருந்த 03 நெல் மூடைகளை சாப்பிட்டிருப்பதுடன் வீட்டின்  சுவர்களையும்  சேதப்படுத்தியுள்ளது. அதேபோன்று இன்னொருவருக்குச் சொந்தமான நெல் வைத்திருந்த குடில் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களினால் ஊர்மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.             










Wednesday, October 19, 2011

யானையின் அட்டகாசம் - சேதமான அரிசி ஆலை (Rice Mill)

எமது மல்வத்தைக் கிராமத்தில், வேளாண்மை அறுவடை முடிவடைந்த காலப்பகுதிகளில் ஊரை அண்டிய காடுகளில் உள்ள யானைகள் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ ஊருக்குள் வந்து பொதுமக்களின்  சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், மக்களுக்குத் தொல்லைகள் கொடுப்பதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதேபோன்றதொரு சம்பவம் , 2011.10.18 செவ்வாய்கிழமை அன்று இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
                                                                            அம்பாறை (புத்தங்கல) காட்டிற்குள்ளிருந்து ஊரைநோக்கி வந்த யானையொன்று ஊருக்குள் நுழையும் வழியிலுருந்த அரிசி ஆலையொன்றை (Rice Mill) அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.  இதன்போது யானையின் சத்தம் கேட்டதை உணர்ந்த அயலிலிருந்த மக்கள் கூச்சலிட்டுக் கத்தியதால் யானை வந்த வழியே ஓடிச்சென்றுவிட்டது. இச்சம்பவத்தில் அரிசி ஆலையானது பெருமளவு உடைந்திருப்பதுடன் ஓரிரண்டு அரிசி மூடைகளும், சில உடைமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
                                                        இவ்வாறு சேதமடைந்த இந்த அரிசி ஆலை மல்வத்தை புதுநகரைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்குச் சொந்தமானதாகும்..












Monday, October 17, 2011

பழையமாணவர்கள் சங்கம் - சது/ விபுலாநந்தா மகா வித்தியாலயம், மல்வத்தை.

 எமது மல்வத்தை கிராமத்திலுள்ள சது/ விபுலாநந்தா மகா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி, மேம்பாடு, வளர்ச்சி என்பவற்றில் அக்கறைகொண்ட பழையமாணவர்களைக் கொண்டு சங்கமொன்றை அமைத்து, அதன்மூலம் இப்பாடசாலையின் குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செயற்படுத்தும் நோக்கில், கடந்த 2011.10.01 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் பாடசாலை வளாகத்தில் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த்தது.
                                                  இக்கூட்டத்திற்கு ஊரிலுள்ள அநேக பழையமாணவர்கள் சமூகமளித்திருந்தனர். மேலும் இக்கூட்டமானது திரு. K.மோகன் (ஆசிரியர்), திரு. K.கருணாகரன் (ஆசிரியர்), திரு. S.சிவகுமார் (ஆசிரியர்) ஆகியோரின் தலைமையின்கீழ் நடைபெற்றது. இதன்போது பழையமாணவர் சங்கமொன்றை அமைப்பது தொடர்பாகவும் பாடசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. முதற்கட்டமாக பழையமாணவர் சங்கத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அது பற்றிய விபரங்கள் கீழே......


தலைவர்
T. கஜேந்திரன்

உபதலைவர்                           
V. கஜேந்திரன்

செயலாளர்                            
N. காஞ்ஜீவன்

உபசெயலாளர்                     
P. சுசிகரன்

பொருளாளர்                         
N. பிரகாஷ்


பிரதான உறுப்பினர்கள் 
K. சுமன்
R. ராஜசேகரன்
E. குகநாத்
A. அசோக்
N. இந்துஜன்
M. பிரகலதன்
V. நவநீதன்
N. பிரதீபன்
S. டிலக்சன்
N. பிரதீஷ்
P. பிரசாந்த்
S. ஜெகதீபன்
P. தனுஜன்
U. சிவரதன்
T. பிரகாஷ்


ஆலோசனையும் வழிகாட்டலும்
K. கருணாகரன் (Teacher)
K. மோகன் (Teacher)
S. சிவகுமார் (Teacher)
S. பிரதீபன் .BSc (Engineer)
K. ரஜனிக்காந்த் .BBA (HRM)
S. சுரேஷ் .BBA
E. தயாநிதி .BBA


Friday, October 14, 2011

விஜயதசமி - விபுலானந்தா மகா வித்தியாலயம், மல்வத்தை.

மல்வத்தையின்  சது/விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் விஜயதசமி நிகழ்வுகள் 06.10.2011 அன்று மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது, அத்துடன் இவ்விஜயதசமி தினத்தன்று மாணவர்களுக்கான ஏடு தொடங்குதல் நிகழ்வுகளும், மற்றும் வாணிவிழாக்  காலங்களில் நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் நிகழ்வுகளும் இடம்பெற்றன... அன்றைய  நிகழ்வுகளின்போது எங்களின் கமராக்களில் பதிவான சில புகைப்படங்கள்  உங்களுக்காக....  ...
































Thursday, October 6, 2011

வாணி விழா நிகழ்வுகள் - V.M.V மல்வத்தை

மல்வத்தையின்  சது/விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள், கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றன. அதற்கமைவாக மூன்றாவது நாளான இன்று (2011.10.05), தேர் ஊர்வலமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து  பாடசாலையில் இடம்பெற்ற சிறப்புப் பூசைகளுடன் இன்றைய நாளுக்கான வைபவங்கள் யாவும் நிறைவடைந்தன. இன்றைய நிகழ்வுகளின்போது எங்களின் கமராக்களில் பதிவான சில புகைப்படங்களும், வீடியோக்களும் உங்களுக்காக....