Pages

Pages

welcome to

.

ஒரு அழகிய பூந்தோட்டம்...

Malwatta - Ampara

Thursday, October 20, 2011

தொடரும் யானையின் அட்டகாசங்கள்..

இரண்டாவது நாளாகவும், 2011.10.19  புதன்கிழமை  நள்ளிரவு வேளையில்  ஊருக்குள் புகுந்த யானையொன்று பொதுமக்களின் சொத்துக்கள் சிலவற்றைச் சேதப்படுத்தியதோடு, பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி, ஊரில் அமைதியின்மையை உண்டுபண்ணியுள்ளது..  
                                                                  குறித்த  ஒரு வளவினுள் புகுந்த அந்த யானை வீட்டினுள்ளிருந்த 03 நெல் மூடைகளை சாப்பிட்டிருப்பதுடன் வீட்டின்  சுவர்களையும்  சேதப்படுத்தியுள்ளது. அதேபோன்று இன்னொருவருக்குச் சொந்தமான நெல் வைத்திருந்த குடில் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களினால் ஊர்மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.             










Wednesday, October 19, 2011

யானையின் அட்டகாசம் - சேதமான அரிசி ஆலை (Rice Mill)

எமது மல்வத்தைக் கிராமத்தில், வேளாண்மை அறுவடை முடிவடைந்த காலப்பகுதிகளில் ஊரை அண்டிய காடுகளில் உள்ள யானைகள் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ ஊருக்குள் வந்து பொதுமக்களின்  சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், மக்களுக்குத் தொல்லைகள் கொடுப்பதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதேபோன்றதொரு சம்பவம் , 2011.10.18 செவ்வாய்கிழமை அன்று இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
                                                                            அம்பாறை (புத்தங்கல) காட்டிற்குள்ளிருந்து ஊரைநோக்கி வந்த யானையொன்று ஊருக்குள் நுழையும் வழியிலுருந்த அரிசி ஆலையொன்றை (Rice Mill) அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.  இதன்போது யானையின் சத்தம் கேட்டதை உணர்ந்த அயலிலிருந்த மக்கள் கூச்சலிட்டுக் கத்தியதால் யானை வந்த வழியே ஓடிச்சென்றுவிட்டது. இச்சம்பவத்தில் அரிசி ஆலையானது பெருமளவு உடைந்திருப்பதுடன் ஓரிரண்டு அரிசி மூடைகளும், சில உடைமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
                                                        இவ்வாறு சேதமடைந்த இந்த அரிசி ஆலை மல்வத்தை புதுநகரைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்குச் சொந்தமானதாகும்..












Monday, October 17, 2011

பழையமாணவர்கள் சங்கம் - சது/ விபுலாநந்தா மகா வித்தியாலயம், மல்வத்தை.

 எமது மல்வத்தை கிராமத்திலுள்ள சது/ விபுலாநந்தா மகா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி, மேம்பாடு, வளர்ச்சி என்பவற்றில் அக்கறைகொண்ட பழையமாணவர்களைக் கொண்டு சங்கமொன்றை அமைத்து, அதன்மூலம் இப்பாடசாலையின் குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செயற்படுத்தும் நோக்கில், கடந்த 2011.10.01 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் பாடசாலை வளாகத்தில் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த்தது.
                                                  இக்கூட்டத்திற்கு ஊரிலுள்ள அநேக பழையமாணவர்கள் சமூகமளித்திருந்தனர். மேலும் இக்கூட்டமானது திரு. K.மோகன் (ஆசிரியர்), திரு. K.கருணாகரன் (ஆசிரியர்), திரு. S.சிவகுமார் (ஆசிரியர்) ஆகியோரின் தலைமையின்கீழ் நடைபெற்றது. இதன்போது பழையமாணவர் சங்கமொன்றை அமைப்பது தொடர்பாகவும் பாடசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. முதற்கட்டமாக பழையமாணவர் சங்கத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அது பற்றிய விபரங்கள் கீழே......


தலைவர்
T. கஜேந்திரன்

உபதலைவர்                           
V. கஜேந்திரன்

செயலாளர்                            
N. காஞ்ஜீவன்

உபசெயலாளர்                     
P. சுசிகரன்

பொருளாளர்                         
N. பிரகாஷ்


பிரதான உறுப்பினர்கள் 
K. சுமன்
R. ராஜசேகரன்
E. குகநாத்
A. அசோக்
N. இந்துஜன்
M. பிரகலதன்
V. நவநீதன்
N. பிரதீபன்
S. டிலக்சன்
N. பிரதீஷ்
P. பிரசாந்த்
S. ஜெகதீபன்
P. தனுஜன்
U. சிவரதன்
T. பிரகாஷ்


ஆலோசனையும் வழிகாட்டலும்
K. கருணாகரன் (Teacher)
K. மோகன் (Teacher)
S. சிவகுமார் (Teacher)
S. பிரதீபன் .BSc (Engineer)
K. ரஜனிக்காந்த் .BBA (HRM)
S. சுரேஷ் .BBA
E. தயாநிதி .BBA


Friday, October 14, 2011

விஜயதசமி - விபுலானந்தா மகா வித்தியாலயம், மல்வத்தை.

மல்வத்தையின்  சது/விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் விஜயதசமி நிகழ்வுகள் 06.10.2011 அன்று மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது, அத்துடன் இவ்விஜயதசமி தினத்தன்று மாணவர்களுக்கான ஏடு தொடங்குதல் நிகழ்வுகளும், மற்றும் வாணிவிழாக்  காலங்களில் நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் நிகழ்வுகளும் இடம்பெற்றன... அன்றைய  நிகழ்வுகளின்போது எங்களின் கமராக்களில் பதிவான சில புகைப்படங்கள்  உங்களுக்காக....  ...
































Thursday, October 6, 2011

வாணி விழா நிகழ்வுகள் - V.M.V மல்வத்தை

மல்வத்தையின்  சது/விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள், கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றன. அதற்கமைவாக மூன்றாவது நாளான இன்று (2011.10.05), தேர் ஊர்வலமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து  பாடசாலையில் இடம்பெற்ற சிறப்புப் பூசைகளுடன் இன்றைய நாளுக்கான வைபவங்கள் யாவும் நிறைவடைந்தன. இன்றைய நிகழ்வுகளின்போது எங்களின் கமராக்களில் பதிவான சில புகைப்படங்களும், வீடியோக்களும் உங்களுக்காக....