Pages

Pages

welcome to

.

ஒரு அழகிய பூந்தோட்டம்...

Malwatta - Ampara

Saturday, October 1, 2011

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி   
மலர்வு                                                                                                                     உதிர்வு 
   1942                                                                                                                           2011 
     12                                                                                                                              09
     11                                                                                                                              29
 
 வீரமுனையை பிறப்பிடமாகவும், மல்வாத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி கிருஷ்ணபிள்ளை அவர்கள், 2011.09.29 ஆம் திகதி வியாழக்கிழமையன்று தன்னுடைய 68 ஆவது வதில் காலமானார். அன்னார் பொ.கண்ணம்மா (மீனாட்சி) அவர்களின் அன்புக்கணவரும், ரவிச்சந்திரன் (அவுஸ்திரேலியா), சுமதி (ஆசிரியை), மதன் (கிராம உத்தியோகஸ்தர்), மோகன்ராஜ், சுசீலா அக்கியோரின் பாசமிக்க தந்தையும், சந்திர ரஜனி, கருணன், சிவமணி, இன்பன் ஆகியோரின் மரியாதையுள்ள மாமனாரும் மற்றும் மைதிலி, சாகித்யாவித்தியா, கஜானன், சிந்துஜன், நிவேதாஅக்சயன், பவிலக்சன், விகாசினி, திநேஷ்காந்த் , பவிக்காந்த், சசிக்காந்த், யதுஷ்காந்த் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் பிரிவால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களுடைய இணையக்குழு சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


எமது வித்தியாலய ஆசிரியை செல்வி கி.சுமதி அவர்களது அன்புத் தந்தையின் மறைவையொட்டி வித்தியாலயம் வடிக்கும்
விழி நீர் அஞ்சலி 
 மருதம் சூழ் மல்வத்தையில்
மாண்புமிகு நாகமணி தம்பதிக்கு
மகனாக அவதரித்து
மாநிலத்தில் "கிட்ணன்" என 
மங்காமல் வாழ்ந்தீரே

இனிதான இல்லறத்தில்
ஈன்றெடுத்த செல்வங்களை
செழிப்பாக வளர்த்தெடுத்து
தலைநிமிர்ந்து வாழ
தரணியில் வழிசமைத்தீரே

நியாயங்கள் பலபேசி
நிரந்தரமாய் அனைவர் மனதினிலும்
நீங்காப் பெருமையுடன்
நிலைபெற்ருள்ளீரே ஐயா 

காலவனின் கபடத்தால்
கடிதாக இன்னுயிரை
கவர்ந்தானோ விரைவாக 
உம் ஆத்மா சாந்திக்காக
இறைஞ்சுகிறோம் இறைவனிடம்
எம் விழிநீரால் ....
- அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள்
சது /வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயம்
வீரமுனை

0 comments:

Post a Comment